சொல்லின்றி எதுவுமற்றவன்! – 113
‘நான்கு பேர்’ கடிதத்தில் மரணம் குறித்து விரிவாக எழுதியிருப்பீர்கள். இதை எழுதாமல் தவிர்த்திருக்கலாம் என்று பிறகு தோன்றவில்லையா?
இல்லவே இல்லை.
சிலவற்றை மேம்போக்காக பார்க்கும்போது இப்படித்தான் தோன்றும். ஆனால் ஆழ்ந்து நோக்கும்போது அது எத்தனை முக்கியமானது என்று புரியும். அதுவும் ஐயா போன்ற, மரணத்தை ஏதோ காதலியை போல வரவேற்க காத்திருக்கும் ஒருவரிடம் பேசுவது, பேசும் எனக்கும், நூலில் அதை வாசிப்பவர்களுக்கும் தெரிந்தோ தெரியாமலோ பெரும் பாடங்களாக அமையக்கூடியது.
இன்னொரு முக்கியமான விஷயம். நம் நீண்ட நெடிய தமிழ் இலக்கிய மரபில், மரணம் பற்றி பேசுவதும், எழுதுவதும் ஒன்றும் புதிது கிடையாது. காலந்தோறும் பலரால் பலவிதமாகப் பேசப்பட்ட, எழுதப்பட்ட ஒன்றுதான். அவ்வகையில் பார்க்கும்போது இது எத்தனை முக்கியமானது என்பது சொல்லாமலேயே உங்களுக்கு தெரியும்; புரியும்.
[இன்னும்]
*