சொல்லின்றி எதுவுமற்றவன்! – 089
உங்கள் மூன்றாவது நூலான ‘முகங்கள்’ இருபது நாளில், அதுவும் நாளுக்கு ஒரு முகமாக முகநூலில் தொடர்ந்து எழுதி பல நூறு பேர்களால் வாசிக்கப்பட்டு பின்பு நூலானது. இந்நூல் குறித்த எண்ணம் எப்போது, எப்படி வந்தது உங்களுக்கு?

(தன் தாடியை வருடியபடி சிலநொடி மெளனித்தவர்) ‘ஐயா’ நூல் எழுதுவதற்கு முன்பாகவே இப்படி ஒரு நூல் எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்றாலும் அதை பின்னாளில் எப்போதாவது எழுதலாம் அதுவும், விகடன் குமுதம் குங்குமம் போன்ற பெரும் வாசகப் பின்னணி கொண்ட இதழ்களில் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் அந்த இதழ்கள் அத்தனை சீக்கிரத்தில் ஓர் இளம் எழுத்தாளருக்கு வாய்ப்பு தர முன் வரவில்லை. இன்னும் சொல்வதென்றால், நாம் சொல்லும் விஷயத்தை காது கொடுத்து கேட்கக் கூட அங்கே யாரும் தயாராக இல்லை.
அதனால், ‘நல்ல விஷயத்தை தரமாக எங்கே எழுதினால் என்ன, அதற்கான வாசகரை போய் சேர்ந்துவிடும்’ என்னும் நம்பிக்கையில் முகநூலில் அறிவித்துவிட்டு, தொடர்ந்து இருபது நாட்கள் 20 முகங்கள் பற்றி எழுதினேன்.
வாசித்தவர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். சில முகங்கள் படித்துவிட்டு அதிர்ந்தார்கள்; மகிழ்ந்தார்கள். சிலருக்கு ஒவ்வொரு முகமும் பாடமாக இருந்ததாக சொன்னார்கள். பலர் வாழ்வின் மீதான நம்பிக்கையை பெற்றதாக கூறினார்கள்.
[இன்னும்]
*