சொல்லின்றி எதுவுமற்றவன்! – 082

முன்னுரையில் அவர் எழுதிய தமிழிலக்கிய வரைபடத்தில் குறிக்கப்படுகிறது என்ற வரியை பற்றி பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆமாம். இதில் இன்னோர் ஆச்சரியம் என்னவென்றால், நான் போகிற போக்கில் ஆங்காங்கே எழுதிப் போன சில தாவரங்கள் பற்றிய தகவல்களை வாசித்தவர், ‘சமகால இளைய இலக்கிய கர்த்தாக்கள் பலருக்கும் வாய்த்திராத செடி, கொடி, மரங்கள் பற்றிய அறிவு இவருக்கு வாய்த்திருக்கிறது. எனக்குத் தெரிந்து கண்மணி குணசேகரனும், என்.ஸ்ரீராமும் இரண்டு விதிவிலக்குகள்’ என்று எழுதியது நான் கனவிலும் எதிர்பார்க்காதது.

கூடவே அவர் சொன்ன, ‘வடிவரசு, தானறியும் தாவரங்கள் பற்றிய புகைப்படங்களையும் தகவல்களையும் தொகுக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது’ என்னும் வார்த்தைகள்தான் பின்பு நான் ‘நிலைத்திணை’ என்னும் பெருநூல் எழுதக் காரணமாக இருந்தது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 081

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=