சொல்லின்றி எதுவுமற்றவன்! – 077

உங்கள் பதிலையொட்டின கேள்வி. ஐயா நூலின் வடிவம் குறித்து யாரேனும் இதுவரை ஏதாவது சொன்னார்களா? குறிப்பாக மூத்த எழுத்தாளர்கள்.

(‘ஆமாம்’ என தலையாட்டுகிறார்)

இரண்டு பேர் சொன்னார்கள். ஒருவர் எனது ஆசிரியர்களில் ஒருவரான நாஞ்சில் நாடன். இன்னொருவர் நான் பெரிதும் மதிக்கும் வண்ணநிலவன். முன்னவர், ”இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தி, பெரிய நூலாவே எழுதி இருக்கலாம்’’ என்றார். பின்னவர், ”இந்த நூல எதுகூடவும் ஒப்பிட்டுப் பார்க்க முடியல. ஆனா, நல்லா இருக்கு’’ என்றார்.

இவர்களை தவிர எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நூலின் தலைப்பில் இருக்கும் ‘குழந்தை’ என்னும் வார்த்தையை தவிர்த்திருக்கலாம் என்று மட்டும் சொன்னார். அவ்வளவுதான்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 076

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=