சொல்லின்றி எதுவுமற்றவன்! – 076
‘ஐயா’ நூலை இப்போது இருப்பதுபோல இல்லாமல், ‘இன்னும் இப்படி எழுதியிருக்கலாமோ?’ என எப்போதாவது தோன்றியிருக்கிறதா?
ஹாஹாஹா… எப்படித்தான் இதுமாதிரியெல்லாம் கேள்வி கேட்கிறீர்களோ தெரியவில்லை. நல்ல அதேநேரம், வித்தியாசமான கேள்வி.
முன்னமே சொன்னதுதான். இந்த நூலை எவ்வித திட்டமிடலும் இல்லாமல்தான் எழுதினேன். வெளிவந்த சிலநாள் கழித்து ஒரே ஒருதடவை, ‘இத இன்னும் வேறமாதிரி எழுதியிருக்கலாமோ?’ என்று தோன்றியது. அடுத்த நிமிடமே, ‘இல்ல… இது இப்படி எழுதினதுதான் சரி’ என்று சொல்லிக்கொண்டேன்.
ஒரு நூலின் வடிவம் முக்கியம்தான் என்றாலும், அதைவிட முக்கியமாக நான் எப்போதும் நினைப்பது அதன் உள்ளடக்கத்தைதான். அந்தவகையில் இந்நூல் குறித்து தினத்தந்தி மூத்த நிருபர் ஒருவர் சொன்னதை இங்கே சொல்ல நினைக்கிறேன். ‘இந்த நூல் பார்க்கதான் அளவுல சின்னது. ஆனா, இதுக்குள்ள இருக்க விஷயமும், அனுபவமும் ஆயிரம் பக்க பெரிய நூலுக்கு சமம்.’
[இன்னும்]
*