சொல்லின்றி எதுவுமற்றவன்! – 041

‘என்னங்க சார் சட்டம் – ஏழை

ரத்தம் உறிஞ்சும் திட்டம்’

என்று ‘எஸ்குஸ்மீ பி.எம் சார்’ பாடலில் எழுதியிருப்பீர்கள். இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது உங்களுக்கு?

ஒரு படைப்பாளிக்கு துணிச்சல் எங்கிருந்தோ வரவேண்டியதில்லை. அவனுக்குள் இருக்கும் அவன் நம்பும் சத்தியமும், சமூகத்தின் மீதான அவனது பார்வையும்; அக்கறையும், அவனைச் சுற்றி நடக்கும் அநீதிகளைக் கண்டதும் தானாகவே வெளிப்படும்.

இன்னொரு முக்கியமான விஷயம். ஒரு படைப்பை, ஏன் இந்த பாடலையே எடுத்துக்கொள்வோம். இது விவசாயிகளின் ஒருமித்தக் குரலாக, அவர்கள் சார்பாக அவர்களின் இடத்திலிருந்து எழுதப்பட்டது. அதனால் அவர்களது அப்போதைய எண்ணத்தையும், கேள்விகளையும், ஆதங்கத்தையும் அப்படியே எவ்வித சமரசமும் இல்லாமல் வெளிப்படுத்துவதாக இருக்கும். ஆகையால்தான் இந்தப் பாடலின் எல்லா வரிகளும் அத்தனை உயிர்ப்புடன் இருப்பதை பார்க்கலாம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 040

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=