சொல்லின்றி எதுவுமற்றவன்! – 021

உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமுடியாத சிறுவயது காலங்கள் பற்றியும், நண்பர்கள் பற்றியும், அவர்களுடன் விளையாடிய விளையாட்டுகள் பற்றியும், சுற்றித்திரிந்த இடங்கள் பற்றியும் சொல்லுங்கள்…

சிறுவயது காலங்களை நான் மட்டுமல்ல… இங்கே இப்பூமியில் பிறந்த யாராலும் அத்தனைச் சீக்கிரத்தில் மறக்கமுடியாது. அதிலும் கை இரண்டையும் சிறகாக்கி, கால் இரண்டையும் சக்கரமாக்கி, காடு மேடு மலை ஆறு கால்வாய் குட்டை கிணறு ஏரி என எங்கெங்கும் சோறு தண்ணியெல்லாம் மறந்து, வெயில் மழை எதையும் பொருட்படுத்தாமல், உற்சாகத்தோடு சுற்றித் திரிந்து திறந்த மனத்துடன் தினந்தினம் புதிது புதிதாகக் கற்றுக் களித்தப் பொற்காலம் அது.

என்னதான் அப்போது எனக்கு வெங்கடேசு, சீனு, மூர்த்தி, ராஜா, சிவா, அன்சர், நிசார், ரியாஸ், ஷபி என எத்தனை எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும், அவர்களில் எப்போதும் முதலில் வந்து நிற்பவன் வெங்கடேசுதான். காரணம், அவனும் நானும் ஒரேநாளில் பிறந்து, ஒரேநாளில் பள்ளியில் சேர்ந்து, ஒன்றாகவே எங்கும் சுற்றித்திரிந்து, திட்டும் பாராட்டும் ஒருசேர வாங்கியவர்கள். என்ன, அவனுக்கு படிப்பு சரியாக வரவில்லை, அதனால் ஏழாவதோடு நின்றுவிட்டான். நான் நன்றாகப் படித்ததால், அடுத்தடுத்துப் படிக்க வந்துவிட்டேன்.  

இங்குதான் என்றில்லாமல் கிராமத்தின் எல்லா இடங்களிலும் ஏதேதோ விளையாடிச் சுற்றித் திரிந்திருந்தாலும், பெரிய கால்வாயில் குதித்து மணிக்கணக்காக ஆடிய ஓரியையும், அரசங்கல் மலையில் ஆளுக்கொரு பக்கமாக ஓடிப் பதுங்கிக்கொண்டு விளையாடிய ஐஸ்நெம்பரையும், கோனார் வீட்டின் பின்னாலிருந்த புளிய மரத்தில் ஏறி விளையாடிய குரங்காட்டத்தையும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. ஆம், இவையெல்லாம் வாழ்வில் திரும்பவும் கிடைக்காதா? என எண்ணுந்தோறும் ஏங்கவைக்கும் தித்திப்பு நினைவுகள்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 020

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=