சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016

எந்த முயற்சியும் இல்லாமல் உங்களுக்குள் இருந்து எழுத்து வெளிப்பட்டதாகச் சொன்னீர்கள். உங்கள் குடும்பத்தில் யாராவது எழுத்து, கலை சார்ந்து இருக்கிறார்களா? அல்லது முன்னோர்களில் யாரேனும் இருந்தார்களா?

என் ஐயா ஒரு தெருக்கூத்துக் கலைஞர் என முதல் நூலிலேயே எழுதியிருக்கிறேன். அவர் வேஷம் கட்டி ஆடினால் பார்ப்பதற்காக சுற்றியுள்ள ஊர் சனங்களெல்லாம் கூட்டம் கூட்டமாக வருவார்களாம். அதிலும், அவரது ஒவ்வோர் அசைவுக்கும், குரலுக்கும் ரசிகர்கள் இருந்ததாகவும், ‘உன் அப்பங்காரன் மட்டும் சினிமாவுக்குப் போயிருந்தான்னா…. அந்த சிவாஜி, எம்.ஜி.ஆருலாம் தோத்துப் போயிருப்பாங்க, தோத்து’ என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நான் மிகச் சிறு வயதாக இருக்கும்போது அவர் தெருக்கூத்து ஆடிப் பார்த்ததாக நினைவு. அதன்பிறகு அவரது நண்பரும் வாத்தியாருமான (இப்படித்தான் சொல்வார்கள் தெருக்கூத்து ஆசிரியரை) கருப்பக்கவுண்டர் என்பவர் இறந்த பிறகு அதோடு கூத்தாடுவதை நிறுத்திக்கொண்டார். அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் கூட பலரும் வந்து தங்களோடு சேர்ந்து ஆடும்படி கேட்டுப் பார்த்தார்கள். முடியாது என்றுவிட்டார். எனினும், ஊரில் நடக்கும் மன்மதன் தகனத்தின்போது மட்டும் ஆண் வேடமும், தோட்டி வேடமும் கட்டி ஆடுவதை தொடர்ந்து வந்தார்.

அத்தனை நேர்த்தியோடும், உற்சாகத்தோடும் துளியும் சோர்வின்றி மணிக்கணக்காக அவர் ஆடுவதையும், ஆயிரக்கணக்கானப் பாடல்களை சுருதி பிசகாமல் பாடுவதையும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்; கேட்டிருக்கிறேன். அதன் தாக்கம்தான் எனக்குள் இருந்து எழுத்தாக வெளிப்பட்டதாக எண்ணுகிறேன்.

அதோடு, எங்கள் குடும்பத்தினர்தான் தலைமுறை தலைமுறையாக ஊர் கோயிலில் பூசாரியாக இருந்து வந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் நன்றாகப் பாடக்கூடியவர்கள்; ஆடக்கூடியவர்கள் என ஐயா சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்படியாக என் முன்னோர்களில் எழுத்து சார்ந்து யாரும் இல்லை என்றாலும், கலை சார்ந்து அதிலும் குறிப்பாக, நாட்டுப்புறக் கலை சார்ந்து இருந்தவர்களின் நீட்சியாக அதுவும், ஐயாவின் நீட்சியாகவே என்னைக் கருதுகிறேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=