சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010
‘இப்படியும் ஒரு மனிதரா?’ கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது. சரி, அவர் பற்றின இன்னொரு கேள்வி. அவரைப் பற்றி நீங்கள் எழுதுவதற்கு முன்பு, அவர் இத்தனை தூரம் உங்கள் எழுத்திலும், உங்கள் எழுத்து வழியாக வாசகர்களுக்குள்ளும் நுழைவார் என்று நினைத்ததுண்டா?

ஒருபோதும் இல்லை. ஆனால், அவர் குறித்து எழுதவேண்டும் என்று மட்டும் உறுதியாகத் தோன்றியது. அதேநேரம், என்னில் அவர் பாதிப்பை ஏற்படுத்தியது போல என் எழுத்து வழியாக அவரை வாசிப்பவர்களில் ஒரு சிலரையேனும் பாதிப்பார் என்றும் தோன்றியது. இங்கே ஆச்சர்யம் என்னவென்றால், அவரை வாசித்த ஒவ்வொருவருக்குள்ளும் அவர் நுழைந்து சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். தன் ஐயாவாக அவர்களை நினைக்க வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல… எல்லோருக்கும் ஏதாவது ஒன்றை தன் வாழ்வு மூலமாகக் கற்றுத் தந்திருக்கிறார். இதுபோன்ற அதிசயமெல்லாம் எப்போதாவதுதான் நிகழும். அதிலும் நேரிலே பார்த்திராத ஒருவர் நிகழ்த்திய இத்தாக்கம் என்பது இப்போது நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.
[இன்னும்]
*
‘சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007