சொல்லன்றி எதுவுமற்றவன்! – 352
பெரும் உணவுப் பிரியர் நீங்கள். எனினும், சமீப காலங்களில் உணவு மீது அவ்வளவாக ஆர்வம் காட்டாதது போல தெரிகிறதே?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. முன்பு விதவிதமான உணவுகளை தேடித் தேடிப் போய் உண்டேன். இப்போது அது குறைந்துவிட்டது. அவ்வளவுதான்.
(சிறிது இடைநிறுத்தியவர்) உணவு பற்றி கேட்டதால் சொல்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது அவ்வளவாக வீட்டில் உண்ண நல்ல உணவு இருக்காது. அந்தளவுக்கு வறுமை. பிறகு நிலைமை சற்று மாறி மூன்று வேளையும் நல்ல உணவு கிடைத்தது. அப்போது பலதடவை அம்மா சமைத்த உணவை குறை சொல்லியிருக்கிறேன். அதற்காக திட்டிகூட இருக்கிறேன். ஆனால், அதன்பிறகு இளங்கலை படிக்க விடுதியில் போய் தங்கினபோதுதான் வீட்டு சாப்பாட்டின் அருமை புரிந்தது. அதுமுதல் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் என்ன இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லாமல் உண்பேன்.
அதன் தொடர்ச்சியாக சென்னைக்கு வந்து பல ஆண்டுகள் தொடர்ந்து உணவகங்களில் உண்டு வெறுத்தபின் இப்போது, வீட்டு உணவு தாண்டி எதுவும் பிடிப்பதில்லை. எப்போதாவது என்றால் கொஞ்சம் விரும்பி சாப்பிடுவேன். மற்றபடி பழைய சோறாக இருந்தாலும் அது வீட்டுச் சாப்பாடென்றால் எனக்கு பேரமுதம்தான்.
[இன்னும்]
*