சொல்லன்றி எதுவுமற்றவன்! – 308

அப்போ, நண்பர்களுடன் சேர்ந்து நீங்களே சொந்தமாக பதிப்பகம் தொடங்க இதுதான் காரணமா?

‘ஆமாம்’ என்று வைத்துக் கொள்ளுங்கள். அதோடு, கூடவே இன்னொரு காரணமும் உள்ளது. என் புத்தகங்களை நான் விரும்பும் நேரத்தில், விரும்பிய விதத்தில் கொண்டுவர வேண்டும் என்று எண்ணியதால், இந்தப் பதிப்பகங்கள் எதுவும் நமக்குச் சரிப்பட்டு வராது என முடிவெடுத்து நண்பர்களோடு சேர்ந்து ஒரு பதிப்பகத்தை தொடங்கிவிட்டேன்.

என் முதல் நூலை வெளியிட முதலில் இரண்டு பிரபல பதிப்பகங்களை அணுகினேன். அதில் ஒரு பதிப்பகம், அதுவும் இன்றைய இளம் எழுத்தாளர்கள் பலரை தாம்தான் முதன்முதலில் அறிமுகம் செய்தோம்; அடையாளப்படுத்தினோம் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் பதிப்பகம், என்னையும், என் நூலையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. குறைந்தது நாஞ்சில் நாடன் தந்த முன்னுரையையாவது அவர்கள் படித்துப் பார்த்திருக்கலாம். அதைக்கூட செய்யாமல் புறக்கணித்தார்கள்.

இன்னொரு பதிப்பகமோ, எடுத்தவுடன் பிசினஸ் பேசினார்கள். அது பிடிக்காததால் வேண்டாம் என்று வந்துவிட்டேன். அதைத் தொடர்ந்து கோவை – விஜயா பதிப்பகம் அந்நூலை வெளியிட்டு, அது பரவலாகப் பேசப்பட்டதும், அந்த முதல் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் வெட்கமே இல்லாமல் என் நண்பனிடம் சொல்லி இருக்கிறார். ‘அது நல்ல புக்கு… நாங்கதான் மிஸ் பண்ணிட்டோம். இப்ப வேணும்னா தர சொல்லுங்க. அடுத்தப் பதிப்ப இன்னும் சூப்பரா வெளியிட்டுடலாம்.’

எத்தனை இழிவான வார்த்தைகள், பாருங்கள்? என் நண்பன் இதனை என்னிடம் சொன்னதால் சும்மா விட்டேன். இதுவே அந்தப் பதிப்பாளர் சொல்லியிருந்தால் ‘தூ’ என முகத்தில் துப்பிவிட்டு வந்திருப்பேன்.

இதோடு போனதா? என்றால், இல்லை. அதே பதிப்பாளர், சென்னை புத்தகத் திருவிழாவில் என் புத்தகங்களை யாரும் பார்க்கக் கூடாது, வாங்கக் கூடாது என்று வேண்டுமென்றே எடுத்து மறைத்துவைத்த சம்பவம் அரங்கேறியதும், பிறகு அதேபோல இன்னொரு பதிப்பகம், இரண்டு ஆண்டுகள் என் நூல்களை வைத்து விற்பனை செய்துவிட்டு, மூன்றாவது ஆண்டு அவர்கள் செய்தது போலவே மறைத்துவைத்து, யார் வந்து கேட்டாலும் இல்லை என்று சொன்ன கேவலம் எல்லாம்தான் பதிப்பகங்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கக் காரணம்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 307

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=