சொல்லின்றி எதுவுமற்றவன்! – 107
கடிதம் வடிவில் சுயசரிதை எழுதிய அனுபவத்தை சொல்லுங்கள்…
ஒருவகையில் என் வாழ்வை திரும்பிப் பார்த்தது போலவும், பின்னோக்கிச் சென்று வாழ்ந்துவிட்டு வந்தது போலவும் இருந்தது. உதாரணத்திற்கு சொல்வதென்றால், சிறுவனாக இருக்கும்போது ஒருதடவை விறகு வெட்ட ஐயாவுடன் எங்கள் ஊரில் இருக்கும் அரசங்கல் மலைக்குப் போய் வீட்டுக்கு வரும் வழியில், ‘ஒருநாள் இரவு முழுக்க… அரசங்கல் மலை உச்சியில உட்கார்ந்து இருந்தால் எப்படி இருக்கும்யா?’ என்று கேட்டதை ஐயா தன் மனத்தில் வைத்திருந்து, இன்னொரு நாள் நிஜமாக்கிய நிகழ்வை எழுதியது, அப்படியே சிறுவயது காலத்திற்கு திரும்பிச் சென்று, அதேமாதிரி மலை உச்சியில் இரவெல்லாம் உட்கார்ந்து இருந்துவிட்டு வந்தது போல இருந்தது.
இன்னொரு வகையில் என் வாழ்வின் மிக முக்கியத் தருணங்களை ஒன்றாக தொகுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும், அதன் மூலமாக வாசிப்பவர்கள் மத்தியில் சிறிதளவேணும் ஊக்கத்தை விளைவிக்க நல்லதொரு சந்தர்ப்பமாகவும் இந்நூல் அமைந்தது. அதிலும் குறிப்பாக, கடிதம் வடிவில் என் தந்தைக்கு யாவற்றையும் சொன்னது, மனத்துக்கு அத்தனை நிறைவாக இருந்தது என்பேன்.
[இன்னும்]
*