சொல்லின்றி எதுவுமற்றவன்! – 102

அருமை. இனி உங்கள் அடுத்த நூலானஅகத்திரியில் ஏற்றிய நெருப்பு’ பற்றி பேசலாம். ஏன் கடித நூலுக்குப் போய் இப்படி ஒரு தலைப்பு?

(மெலிதாக சிரித்துவிட்டு) நீங்களும் கேட்டுவிட்டீர்களா? சரி, சொல்கிறேன்.

முதலில் இப்படி ஒரு நூல் எழுதும் எண்ணமே இல்லை. மாதத்திற்கு ஒருதடவை அல்லது இரு மாதத்திற்கு ஒரு தடவை ஊருக்குச் சென்று அங்குள்ள ஐயாவை பார்த்துப் பேசிவிட்டு வரும் எனக்கு, கொரொனோ தொடர் வீடடைவு காலத்தில் ஆறரை மாதங்களுக்கு மேலாக ஊருக்குப் போகமுடியாத சூழல் ஏற்பட்டது.

அந்தக் காலங்களில் அவரிடம் சொல்ல எத்தனையோ விஷயங்கள் இருந்தன. அதையெல்லாம் நகர்பேசியில் அழைத்து சொல்லமுடியாது என்பதால், கடிதம் மூலமாக சொன்னால் என்ன? என்று ஒருநாள் தற்செயலாக தோன்றியது. உடனே சொல்லலாமே என முடிவெடுத்தேன்.

‘அன்புள்ள ஐயாவுக்கு…’ என்றுதான் ஒவ்வொரு கடிதத்தையும் தொடங்கி எழுதினேன். அதனால் அதையே பின்னர் நூலுக்கு தலைப்பாக வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு கடிதத்தின் தலைப்பும் ஒரு நூலுக்கான தலைப்பு மாதிரி இருந்ததால், அவற்றில் இதயம் போல இருந்ததை வைத்துவிட்டேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 101

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=