சொல்லின்றி எதுவுமற்றவன்! – 051
நீங்கள் சொன்னதும்தான் ஒரு விஷயத்தை கவனித்தேன். பசியுடன் வரும் ஒரு பட்சிக்கு தன்னிடம் இருக்கும் கடைசிப்பிடி விதைநெல்லையும் தருவது. இதெல்லாம் ஒரு விவசாயியால் மட்டும்தான் சாத்தியம் அல்லவா?
ஆமாம்.
அதுவும் அதை விதைத்தால்தான் இனி தனக்கும் தன் குடும்பத்துக்கும் சோறு என்றபோதும், தன்னிடம் இருக்கும் கடைசி நம்பிக்கை அதுதான் எனினும், பெரும் பசியில் தன்னை நம்பி வந்த ஓர் உயிரை – பட்சியை – ஏமாற்றத்தோடு திருப்பி அனுப்பாமல் தன்னிடம் இருந்ததை அதற்குப் போட்டு, அதன் பசியை தீர்த்து அனுப்பிவிட்டு,
‘இனி வெதக்க ஏதுமில்ல –
உசுர் தவுரக் கையில…
நா(ன்) வெதஞ்சிப் போறன்புள்ள –
மக்கப் பஞ்சம் தீரட்டும்…’
என்று தனது உயிரை விடுவதெல்லாம் மண்ணையும், மக்களையும், அங்குள்ள மரம்செடிகொடிகளையும், மற்ற உயிர்களையும் நேசித்த ஓர் உன்னத மனிதரால் – விவசாயியால் – மட்டுமே முடியும்.
இதை என் ஐயாவை மனத்தில் நிறுத்தி எழுதியதாக முந்தைய பதிலில் சொன்னேனல்லவா… அவர் இந்த இடத்தில் இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார். அதை யூகித்தே இந்த வரிகளை எழுதினேன்.
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 050