சொல்லின்றி எதுவுமற்றவன்! – 042

வானம் தாண்டி உங்கள் தனிப்பாடல்களிலேயே தனித்துவமானது; சிறப்பானது. அது உருவானவிதம் பற்றி சொல்லமுடியுமா?

சொல்கிறேன். ஒருநாள் வழக்கம்போல் என் கல்லூரி மைதானத்தில் உட்கார்ந்துகொண்டு நாஞ்சில் நாடனின் ‘திகம்பரம்’ வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது நகர்பேசியல் அழைத்திருந்த என் கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன் அவர்கள், என்னை உடனே கிளம்பி தான் இருக்கும் இடத்திற்கு வரச்சொன்னார். போனேன்.

அங்கே அவருடன் இருந்த திருநர் ப்ரியா பாபு அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து, ”இவங்க மூன்றாம் பாலினம் பத்தி ஒரு பாடல் உருவாக்க நினைக்கிறாங்க. கவிஞர் தாமரை இல்லைனா… வேற யாராவது பெரிய பாடலாசிரியர வைத்து எழுதலாம்னு சொன்னாங்க. நான்தான் நம்ம வடிவரசன் இருக்காரு. நீங்க எதிர்பார்க்கிறதவிட நல்லாவே எழுதுவாருன்னு சொல்லிருக்கேன். எழுதிக்கொடுங்க வடிவரசன்’’ என்றார்.

மகிழ்வுடன் சம்மதித்து, ஒரு மணி நேரத்திற்கு மேல் அங்கே அவரோடு பாடல் குறித்துப் பேசிவிட்டு வந்து, அடுத்த நாளே பாடலை எழுதி என் இசையமைப்பாளருக்கு அனுப்பி இசையமைக்கச் சொல்லி அமைத்ததும் அவரை வரவழைத்துப் போட்டுக் காட்டினேன்.

கேட்டுவிட்டு என் கையைப் பிடித்துக்கொண்டு, ”தோழர் நாங்க எதிர்பார்த்ததவிட பிரமாதமா எழுதிட்டீங்க. பாட்டு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. இப்போ இதுக்கு எப்படி காட்சி அமைக்கப்போறோம்னுதான் தெரியல’’ என்றார்.

உடனே என் இன்னொரு நண்பரான இயக்குனர் துருவன் ராஜபாண்டியை வரவழைத்து அவருக்கு அறிமுகம் செய்துவைத்து, இருவரையும் சேர்ந்து இயக்கச் சொன்னேன். அத்தனை அர்ப்பணிப்போடு இணைந்து இயக்கியிருந்தார்கள்.

நீங்கள் சொன்னதுபோல் இந்தப் பாடலில் எத்தனையோ தனித்துவங்கள் இருக்கின்றன. வரிகளில் ஆரம்பித்து… இசை, காட்சியமைப்பு, காட்சியில் வரும் திருநர்கள் வரைக்கும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படியொரு பாடல் எழுத வாய்ப்பு பெற்றுத்தந்த காளீஸ்வரன் ஐயாவுக்கு இதுநாள் வரைக்கும் அதற்கான நன்றியை நான் சொன்னதில்லை. ஒருவேளை தந்தை இடத்தில் இருக்கும் அவருக்கு எதற்கு நன்றி என நினைத்து சொல்லாமல் விட்டிருக்கலாம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 041

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=