சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018
படிக்க வந்துவிட்டதால் நீங்கள் தெருக்கூத்து கற்கவில்லை, சரி. உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களாவது கற்றிருக்கலாமே?
கற்றிருக்கலாம்தான். ஆனால், முன்னமே சொன்னது போல அதற்கான வாய்ப்பு அமையாமல் போய்விட்டது. அதுவும், ஐயா என்றைக்கு தெருக்கூத்து இனி வேணாம் என முடிவெடுத்து ஆடுவதை நிறுத்தினாரோ, அன்றோடு எங்களூரில் தெருக்கூத்துக் கலையும் முடிவுக்கு வந்துவிட்டது. அதுவரை ஆடியவர்களும் அவரோடு சேர்ந்து நிறுத்திவிட்டார்கள். அதன்பிறகு எங்கள் கிராமத்தில் நடந்த தெருக்கூத்துகள் எல்லாமே வேறு ஊர் கலைஞர்களைக் கொண்டே நடத்தப்பட்டது.
என்றபோதும், மன்மதன் தகனத்தின்போது ஆண் வேடம் கட்டி ஆடுவதையும், தோட்டி வேடம் கட்டுவதையும் என் தவிர எனது அண்ணன்கள் அனைவரும் நன்கு அறிவர். அவர்கள் அதை ஐயாவிடமிருந்தே நேரடியாகவும், மறைமுகமாகவும் கற்றிருக்கிறார்கள்.
இப்போது திரும்பிப் பார்க்கையில், எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒருவகையில் கலை வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை பார்க்கமுடிகிறது. என்ன, நான் எழுத்துக்கு வந்துவிட்டேன். அவர்கள் நாட்டுப்புறக் கலைகளோடு அங்கேயே நின்றுவிட்டார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
[இன்னும்]
*
‘சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015