‘www.vadivarasu.in’ – ஓராண்டு நிறைவு!

நண்பர்கள், அன்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
‘www.vadivarasu.in‘ என்னும் எனது இந்த இணையதளம் ஆரம்பித்து இன்றோடு ஓராண்டாகிறது. இந்த ஓராண்டில் மட்டும் முன்னமே எழுதிய பழைய மற்றும் அவ்வப்போது எழுதிய புதிய பதிவுகள் என மொத்தம் 544 பதிவுகள் வெளியாகியிருக்கின்றன.
இதோ, இன்றுமுதல் இரண்டாமாண்டில்… முந்தைய ஆண்டைக் காட்டிலும் மிகுதியாக, இன்னும் இன்னும் சிறப்பாக என் படைப்புகளை வெளியிட எண்ணியிருக்கிறேன். இதன் தொடக்கமாக சுயநேர்காணல் ஒன்று ஆரம்பித்திருக்கிறேன்.
வாழ்த்திய யாவருக்கும் அன்பும் நன்றியும். கூடவே, இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவானதைக் கொண்டாடும் விதமாக நள்ளிரவில் ‘சர்ப்ரைஸ் கேக்’ வாங்கிவந்து வெட்டவைத்த மனைவி (கோ)மதிக்கு பேரன்பும் பெருங்காதலும்.
*