சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012
இதை இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லமுடியுமா?
சொல்கிறேன். தமிழில் இன்றைக்கு இருக்கக்கூடிய எந்த அகராதியை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். அதில் எங்கள் ஊரில் இருக்கும் படிக்காத பாமர மக்கள் சர்வ சாதாரணமாகப் பேசக்கூடிய போரை, பொடை, பொனக்கட்டை, அணில்காய், தெரட்டி, தமட்டை, பைசி, சோமம் போன்ற சொற்கள் இல்லாததைக் காணலாம்.
அதேநேரம் எங்களூரின் ஒருபகுதியாக அதுவும், மேட்டுப்பகுதியாக இருக்கக்கூடிய எங்கள் வீடு இருக்கும் பகுதி மக்களால் ‘முரம்பு’ என்று அழைக்கப்படுவதையும், அதற்குக் காரணமாக அங்கிருக்கும் நில அமைப்பும், மண் தன்மையும் சொல்லப்படுவதையும், அச்சொல்லைத் தேடிப் போனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான சங்க இலக்கியப் பரப்பில் கூட்டிப்போய் நிறுத்துவதையும் பார்க்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், இவை எதுவும் எங்களூர் மக்களுக்குத் தெரியாது. இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு சமகால இலக்கியத்தில் பதிவுசெய்யவும், வருங்கால சந்ததிகளுக்கு பயன்படும்படி பாதுகாக்கவும் என் போன்ற ஒருவர் வரவேண்டி இருக்கிறது. அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து. இதைத்தான் முந்தைய பதிலில் மேலோட்டமாகச் சொன்னேன்.
[இன்னும்]
*
‘சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009