சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

வார்த்தைக்கு வார்த்தை ‘ஐயா ஐயா’ என்கிறீங்கள். ஏன் உங்கள் அம்மா குறித்து எதுவும் சொல்வதில்லை?

(சிரிக்கிறார்) அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ‘ஐயா’ நூல் தொடங்கி அண்மையில் எழுதி முடித்த ‘அரசங்கல்’ நாவல் வரைக்கும் வாய்த்த சந்தர்ப்பத்தில் எல்லாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அம்மா குறித்து சொல்லிக்கொண்டுதான் வருகிறேன். சரி, நீங்கள் இங்கே கேட்டதற்காக தனியாகச் சொல்கிறேன்.

என் அம்மா போல பெரும் உழைப்பாளினி ஒருத்தி எங்கள் ஊரிலேயே கிடையாது என்பேன். விட்டால் இந்த 85 வயதிலும் தயங்காமல் சேற்றில் இறங்கி களை பறிக்கவும், இளசுகளுடன் போட்டிப் போட்டுக்கொண்டு மல்லாட்டைக்குக் களைவெட்டவும், அருவா எடுத்துக்கொண்டு நெல்லறுக்கவும் போய்விடுவார். உழைத்து உழைத்துத் தேய்ந்த தேகம் சும்மா இருக்காது என்பதற்கு என் அம்மாவை உதாரணமாகச் சொல்லலாம்.

இன்னொரு விஷயம், என் அம்மா அளவுக்கு தன்மானக்காரி எனக்குத் தெரிந்து யாருமே இல்லை. என்றோ ஒருநாள் என் அண்ணி சாப்பாட்டு விஷயத்தில் எதையோ சொல்லிவிட்டார் என்பதற்காக, தனக்கானச் சாப்பாட்டை இனி வாழ்நாள் முழுக்க தானே பொங்கிச் சாப்பிடுவேன் என முடிவெடுத்து, அவர்கள் முன்பாக தினந்தோறும் ஆக்கி உண்டு கம்பீரமாக வாழ்ந்து வருகிறார்.

படிக்காதவர் என்றாலும், பேச்சில் அத்தனை முதிர்ச்சியும் அனுபவமும் கலந்திருக்கும். ஓர் உதாரணம் சொல்கிறேன், கேளுங்கள். சில தினங்களுக்கு முன்பு நகர்பேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சு வாக்கில், ‘ஒருத்தவங்க காலால இட்ட வேலய, நாம கையாள செஞ்சா… அவுங்க நம்மள தோளுல வச்சி தாங்குவாங்க’ என்றார். அன்றைய தினம் முழுக்க இதையே நினைத்து நினைத்து வியந்துபோனேன். இதுதான் அம்மா!

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=