சொல்லன்றி எதுவுமற்றவன்! – 311

அதேபோல, அறிமுகக் கூட்டங்களும், விமர்சனக் கூட்டங்களும்கூட வைப்பதில்லையே?

ஆமாம். இதை ஓர் எழுத்தாளன் ஒருபோதும் செய்யக்கூடாது என நினைப்பவன் நான்.

எழுத்தாளன் என்பவன் தம் படைப்பை படைத்துவிட்டு, அத்துடன் அதிலிருந்து விடுபட்டு அடுத்தடுத்தப் படைப்புகளுக்கு நகர வேண்டும். ஆனால், இன்றைக்கு சில படைப்பாளிகள் தம் படைப்புகளுக்கு தானே ஊர் ஊராகப் போய் வெளியீட்டு விழாக்களும், அறிமுகக் கூட்டங்களும் நடத்துவதை, அதையும் தனக்குத் தெரிந்தவர்களை வைத்து மட்டுமே செய்வதை, பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. இதை ஒருநாளும் ஒரு நல்ல படைப்பாளன் செய்யமாட்டான்.

‘அப்போ, யார்தான் அதனைச் செய்வது?’ எனக் கேட்கலாம்.

மாறாக, அவனது நூலினை வாசித்த யார் என்றே தெரியாத வாசகர்களும், இலக்கிய அமைப்புகளும் அவற்றைச் செய்ய வேண்டும். உலகம் முழுக்க இப்படித்தான் நிகழ்கிறது. ஆனால், நம் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு படைப்பாளன், ஒரு படைப்பை எழுதிவிட்டு, ஓராயிரம் படைப்பு எழுதியதாக அத்தனை வெளியீட்டு விழாக்களும், அறிமுக – விமர்சனக் கூட்டங்களையும் கூச்சமின்றி தானே நடத்தி, தான்தான் பெரிய எழுத்தாளர், தனக்குதான் இங்கே பெரும் வாசகப் பரப்பும், செல்வாக்கும் உள்ளதென்று பம்மாத்து காட்டி பெருமைப்படும் அவலம் நிகழ்கின்றன.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 310

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=