சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019

நீங்கள் எழுத்தை தேர்ந்தெடுத்ததற்கு உங்கள் ஐயா தவிர வீட்டில் உள்ள அனைவரும் எதிர்த்தார்கள் என்றீர்கள். அது ஏன் என சொல்ல முடியுமா?

எழுத்தை எதிர்க்க அப்படி என்ன புதியக் காரணம் இருந்துவிடப் போகிறது? எல்லாம் காலம் காலமாக இருப்பதுதான். ‘அது எப்படி எழுத்து போய் ஒருவருக்கு சோறு போடும்? அதுவும், இந்த தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழ் மொழியில எழுதி ஒருவரால் நன்முறையில் வாழ்ந்திட முடியுமா?’ என்ற அடிப்படைக் கேள்விதான்.

ஒருவகையில் இது நியாயமானக் கேள்வியாக இருந்தாலும், இதைக் கடந்துதான் இங்கே எத்தனை எத்தனையோ படைப்பாளிகள் இயங்கி இருக்கிறார்கள். தம் படைப்புகளை தொடர்ந்து படைத்திருக்கிறார்கள். அதனால், அவர்களது எதிர்ப்பை அத்தனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், என் முடிவில் மிக உறுதியாகவே இருந்தேன்.

என் சிந்தையெல்லாம் அப்போது என் ஐயா என்னையும், எனது முடிவையும் புரிந்துகொண்டு ஏற்பார் என்றுதான் இருந்தது. என்ன ஆச்சரியம், நான் நினைத்தது போலவே அவர் புரிந்துகொண்டு மகிழ்வோடு தட்டிக்கொடுத்தார். அந்தப் புரிதலும், தட்டிக் கொடுத்தலும்தான் என்னை இத்தனை உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும் எழுத்துலகுக்குள் நுழைய வைத்ததாகத் தோன்றுகிறது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=